
மருது பாண்டியர்களின் குருபூஜைக்கு வரும் வாகனங்கள் விதிகளை மீறி இயக்கினால் கடுமையாக நடவடிக்க்கை எடுக்கபடும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது பாண்டியர்களின் 220-வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்களின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குருபூஜைக்கு ஏராளமானோர் வரக் கூடும் என்பதால் தீவிரமாக கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.