ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்.... 70 க்கும் மேற்பட்ட இடங்களில் அசால்ட்டாக வெற்றி....

உள்ளாட்சி தேர்தலில் 70 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, திமுக, அதிமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை விஜய் ரசிகர்கள் கைப்பற்றி இருப்பது, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்.... 70 க்கும் மேற்பட்ட இடங்களில் அசால்ட்டாக வெற்றி....

விஜய் ரசிகர்களின் மெளன புரட்சி.. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்களின் கணிசமான பங்கை புறந்தள்ள இயலாது. 70 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்தார்கள். இத்தனைக்கும் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக வாய்ஸ் தரவில்லை. 1967 ல் நடந்த சட்டமன்ற  தேர்தலில் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், படுத்துக்கொண்டே மக்களை சந்திக்காமல் வெற்றி வாகை சூடினார்.

1984 ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று  கொண்டே தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தமிழக முதல்வர் ஆனார் எம்ஜிஆர். இதே பாணியில் மக்களை நேரடியாக சென்று வாக்கு கேட்காமல், போஸ்ட் அடிக்காமல் உள்ளாட்சி தேர்தலில் 60க்கும் மேற்ப்பட்ட வார்டுகளில் விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்றார்கள்

பாமக, மநீம, நாம் தமிழர் கட்சி, ஆகிய கட்சிகளை பின் தள்ளி, திமுக, அதிமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை விஜய் ரசிகர்கள் கைப்பற்றி இருப்பது, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் ரசிகர்கள் பெற்ற வெற்றி, மெளன புரட்சியாக கருதப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com