நடுரோட்டில் மாட்டிக்கொண்ட குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்க தலைவர் செய்த உதவி.! 

நடுரோட்டில் மாட்டிக்கொண்ட குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்க தலைவர் செய்த உதவி.! 
Published on
Updated on
1 min read

திருச்சியை சேர்ந்த கணேஷ் என்பவர் தனது மனைவி சுமதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் குளித்தலை குறப்பாளையம் அருகே கொட்டும் மழையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு நாவுக்கரசன் அவர்களை பார்த்து இப்படி மழையில் நிற்க காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.

அதற்கு தனது மனைவியின் தந்தை இறந்துவிட்டதால் கோயம்புத்தூர் சென்று திரும்பி வரும் வழியில் தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகி நின்றதையும், பஞ்சர் பார்க்கும் கடைகள் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்பதாகவும் கூறியுள்ளார். 

இதனைக் கேட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு அவர்கள்,  தனது நண்பரும் விஜய் மக்கள் இயக்க தலைவருமான திரு.சதாசிவம் என்பவரிடம் இந்த சம்பவம் பற்றி கூறி அவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து சதாசிவம், தனது காரின் கணேஷ்  குடும்பத்தினரை ஏற்றி அவர்களை திருச்சியில் இருக்கும் அவர்களது இல்லத்தில் விட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் இந்த உதவியை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு நாவுக்கரசனுக்கும், விஜய் மக்கள் இயக்க தலைவருமான திரு.சதாசிவம் என்பவருக்கும் கணேசின் குடும்பம் மனதார நன்றி தெரிவித்தனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com