உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தேமுதிக மற்றும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக நின்ற வேட்பாளர்களுக்கு பாராட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், அதில் '9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்' எனக்குறிப்பிட்டுள்ளார்.