ஜெயலலிதா குறித்து பேசிய முதலமைச்சர்...சட்டப்பேரவையில் கண்டித்து பேசிய ஓபிஎஸ்..!

ஜெயலலிதா குறித்து பேசிய முதலமைச்சர்...சட்டப்பேரவையில் கண்டித்து பேசிய ஓபிஎஸ்..!
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் தான் கொண்டு வந்த தீர்மானத்தின் சாதக அம்சங்களை குறித்து தான் பேச வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தி பேசினார்.

முதலமைச்சர் பேச்சு :

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1972 ல் இத்திட்டம் மிகமிக அவசியம் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி பேசினார். அதற்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நிதி ஒதுக்கினார். பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. அதுமட்டுமல்லாமல், இத்திட்டத்திற்கு ஆரம்பம் முதல் ஆதரவு தெரிவித்து வந்த ஜெயலலிதா திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இத்திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததாக குற்றம் சாட்டி பேசினார்.

பன்னீர்செல்வம் பேச்சு :

இந்நிலையில் ஜெயலலிதா குறித்து பேசிய முதலமைச்சரை கண்டித்து சட்டப்பேரவையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”முதலமைச்சர் தான் கொண்டு வந்த தீர்மானத்தின் சாதக அம்சங்களை குறித்து தான் பேச வேண்டுமே தவிர, முன்பு இருந்த அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்களை இந்த சபையில் பயன்படுத்த வேண்டாம், அதை பேச ஆரம்பித்தால் எல்லோரும் பேசக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும்” என்பதை தெரிவித்தார். 

சச்சரவு வரக்கூடாது :

அப்போது இடையே மறித்து  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த தீர்மானம் ஒட்டுமொத்தமாக ஏகமானதாக நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம். இதில் சச்சரவு வரக்கூடாது என விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

முதலமைச்சரை தொடர்ந்து, பேசிய ஓ.பன்னீர்செல்வம், "முதலமைச்சர் தீர்மானத்தை கொண்டு வந்த போது ஜெயலலிதா கருத்து குறித்து கருத்தை பதிவு செய்திருப்பதாக” குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com