அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

தமிழக அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம்-  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பாஜக ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பேசுகையில் , தமிழகத்தில் பாஜக கட்சியானது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தொண்டர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் பாரம்பரியத்தையும் மண்ணின் பெருமைக்கும் எதிராக திமுக அரசு அரசியல் செய்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தற்போது குறைந்து விட்டதாக கூறி அரசு மதுபான கடைகளையும், பள்ளிக்கூடங்களையும் திறக்க அனுமதி வழங்கி விட்டு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்திருப்பதை   கடுமையாக விமர்சித்தார்.

அதனைதொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜகவின் சார்பில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம் என்று கூறினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வரும் பத்தாம் தேதி பாஜக சார்பில் மிகப்பெரிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com