கலாஷேத்ராவில் நடப்பது என்ன? மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்!!!

கலாஷேத்ராவில் நடப்பது என்ன?  மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்!!!
Published on
Updated on
2 min read

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் தொடர் உள்ளிருப்பு ஈடுபட்டு வருகின்றனர்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

மேலும் ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.


ஆனால் அந்த விசாரணையில், பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்று கூறியது கல்லூரி நிர்வாகம். இதற்கிடையில் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், “10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர்” என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கியுள்ளார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலாஷேத்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் தொடர் உள்ளிருப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில், பணிபுரியும் ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று நடன உதவியாளர்கள், கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சமந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று காலை முதல் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாலியல் தொல்லை புகார்கள் குறித்து மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த புகார் கடிதத்தில், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் அளித்து வருவதாகவும், அவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நடன துறையின் தலைவர் Jyolsna Menon ஆகியோர் காப்பாற்றி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் எழுதி உள்ளனர்.

தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டு மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவி ஒருவர் கூறுகையில், கல்லூரியில் தொடர்ச்சியாக இதுபோன்று அந்த நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர் என நான்கு மாதங்களாக தெரிவித்து வருகிறோம்.

ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ராவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் இன்று காலை 10 மணிக்கு நேரில் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com