"வரப்புயர நீருயரும்; நீருயர நெல் உயரும்; நெல்லுயரக் குடி உயரும்; குடி உயரக் கோல்உயரும்; கோல்உயரக் கோன்உயர்வான்" என்ற ஒளவையாரின் முதுமொழி பாடலுடன் உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி.
ஆளுநர் ஆர்.என். ரவி உரையின் முக்கிய தகவல்கள்:
அத்திகடவு- அவிநாசி திட்டம் விரைவில் அமலுக்கு வரும்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1.01 கோடி மக்கள் பயன்பெற்று உள்ளனர்.
2ஆவது மற்றும் 3ஆவது கொரோனா அலையை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது.
நீட் தேர்வை தடுக்க மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி நடவடிக்கை எடுத்து உள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
போதை பொருட்கள் கடத்தல், விநியோகத்தை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான உரிமை மீட்டு எடுப்பதில் உறுதியாக உள்ளது. 232 மீனவர்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளனர். 10 மீனவர்களை மீட்க நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தி உள்ளது தமிழ்நாடு அரசு. இதற்காக உலகளாவிய நிபுணர்களுடன் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கடுவேலி, அகத்தியார் மலையில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது.
பாலுக்கான கொள்முதல் விலை ₹3 உயர்த்தப்பட்டு உள்ளது.
உரை நிறைவு:
ஜெய் ஹிந்த் என கூறி தனது உரையை நிறைவுசெய்த ஆளுநர் ஆர்.என்.ரவி.யைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.
அவையை வெளிநடப்பு:
ஆளுநர் உரையைக் குறித்து சில விமர்சனங்களை முதலமைச்சர் முன் வைத்தபோது அவையை விட்டு வேகமாக வெளியேறினார் ஆளுநர் ஆர். என். ரவி.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அவையை விட்டு வேகமாக வெளியேறிய ஆளுநர்.... காரணம் யார்?!!