நாட்டில் யாருக்குப் பிறக்கிறது 2023 புத்தாண்டு ? - ரவிக்குமார் எம்.பி

ஆங்கில புத்தாண்டுக்கு பலரும் வாழ்த்துக்களை அனைவரும் பகிரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எம்.பி -ன் முகநூல் பதிவு வித்தியாசப்பட்டிருக்கிறது.
நாட்டில்  யாருக்குப் பிறக்கிறது  2023 புத்தாண்டு ?  - ரவிக்குமார் எம்.பி

2022 ஆம் ஆண்டு கடைசி நாள்:

2022 ஆம் ஆண்டின் டிசம்பர் 31 தேதியில் நிற்கிறோம். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக அரசியல் ஆளுமைகள்  திரைப்பிரபலங்கள் தொழிலதிபர்கள் அதிகமான  நபர்களால் அதிகமாக வாழ்த்துக்களும் பகிரப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதி நாடாளுமன்ற எம்.பியுமான ரவிக்குமாரின் முகநூல் பதிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது.  

ரவிக்குமார் எம்.பி முகநூல் பதிவு 

புத்தாண்டு 2023

இன்றுடன் ஆண்டு முடிகிறது என்கிறீர்கள்

நாட்காட்டியின் கடைசித் தாள்
முடிவது தவிர...

வேறு எதுவும் இன்றுடன்
 முடியப்போவதில்லை

இழிவு
அவமதிப்பு

பாகுபாடு
எதுவும் நாட்காட்டியின் கடைசித் தாளைப்போல எளிதாகக்
கிழித்தெறியக்கூடியவை அல்ல 


இப்போதும் 

சாலையில் நடப்பதற்கு 

கால்களும்
சலூனில் முடிவெட்டிக்கொள்ள 
தலைகளும்

விலையாகக் கேட்கப்படுகின்றன

தேநீர்க்கடையின் தனிக்குவளையில் 
தொங்குகிறது 

மானம்

மலம் கலக்கப்பட்ட 
 குடிநீர்த் தொட்டி

ஜனநாயகத்தின் குறியீடாகிவிட்ட

 நாட்டில்

யாருக்குப் பிறக்கிறது 
புத்தாண்டு ?

என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவானது பலராலும் விமர்சிக்கவும் கேள்விக்காகவும் உபயோகப்படுத்துகின்றனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com