தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? டெல்லிக்கு பறந்த அதிகாரிகள்!

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? டெல்லிக்கு பறந்த அதிகாரிகள்!

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி யார்? என்பதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதேபோல் தமிழ்நாட்டின் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவின் பதவிக்காலமும் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து முடிவெடுக்க டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டு அதிகாரிகள் டெல்லி புறப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவும் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகே தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி யார்? என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தலைமைச் செயலாளர் பரிந்துரை பட்டியலில்,  ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com