நீட் தோ்வுக்கு எதிராக அதிமுக ஏன் போராடவில்லை? உதயநிதி கேள்வி!

நீட் தோ்வுக்கு எதிராக அதிமுக ஏன் போராடவில்லை? உதயநிதி கேள்வி!

திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்விற்காக போராடியதாகவும் ஆனால் அதிமுக நீட் தேர்விற்கு எதிராக ஏன் போரடவில்லை எனவும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெரம்பலூர் அரியலூர் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக விளையாட்டு, மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசிய அவர், நீட் தேர்வை எதிர்த்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அதில் முழு வெற்றி இல்லை இருந்தபோதிலும் நீட் தேர்வுக்காக எதிர்த்து நாம் போராடினோம். அதுவே வெற்றி. அதை ரத்து செய்யும்போது மட்டுமே முழு வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.  

நீட் தேர்வினால் தமிழகத்தில் மட்டும் ஆறு வருடத்தில் 21 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. ஒன்றிய அரசு தான் கொலை செய்தது. அந்த மாணவனை மட்டும் விட்டு வைக்காமல் அவர் தந்தையும் சேர்ந்து கொலை செய்தது ஒன்றிய பாஜக. அதற்கு துணை நின்ற அதிமுக கட்சிதான். நீட் தேவை திமுக எதிர்க்கட்சி இருக்கும் பொழுது ரத்து செய்ய போராடியது. ஆனால் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டிய அதிமுக கட்சி ஏன் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் ஒரு மாநாடு என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, நமது மாநாடு விரைவில் நடைபெறும். ஆனால் தற்போது இருபதாம் தேதி நடத்தப்பட்ட மாநாடு, அது மாநாடா? அது கொள்கையை பற்றி பேசப்பட்டதா? அதில் ஆடல் பாடல் வெறும் பொழுதுபோக்கான மாநாடு? அது மட்டுமா அதிமுக பொதுக்கூட்டத்தில் பொண்டாட்டிய காணோம்னு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை யார்கிட்ட கேக்கணும் நம்ம ஜெயக்குமார் தான் கேக்கணும் என்று நக்கலாக கேட்டார். 

நீட் தேர்வில் முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா பெயரில் கூட்ட அரங்கிற்கு பெயர் வைத்து என் கையாலே திறந்து வைத்துள்ளேன் எனக்கூறிய அவர், நடக்க இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு குடும்பத்துடன் அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com