DMK FILES 2-ஆம் பாகம் வெளியிடப்படும்...அடுத்த அப்டேட் கொடுத்த அண்ணாமலை!

DMK FILES 2-ஆம் பாகம் வெளியிடப்படும்...அடுத்த அப்டேட் கொடுத்த அண்ணாமலை!

Published on

முதலமைச்சர் குடும்ப ஊழல் குறித்து பேசியதற்காக பிடிஆரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றுவதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  வினவியுள்ளார். பிடிஆர் பேசிய ஆடியோவை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். முதலமைச்சர் குடும்ப ஊழல் குறித்து பிடிஆர் பேசிய ஆடியோவை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என்று கூறினார். பி.டி.ஆர் சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் கூறிய நிலையில், நிதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

டி.ஆர்.பாலு  மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் ஓஎன்ஜிசி நிறுவன கேஸை குறைந்த விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்தார் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க.வினர் தன்மீது ஆயிரத்து 461 கோடி ரூபாய் கேட்டு  அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், சுதந்திரமடைந்த பிறகு ஒரு தனி மனிதன் மேல் இத்தகைய பெரிய தொகை கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது இதுவே முதல் முறை என அண்ணாமலை கூறினார்.

மேலும், DMK FILES இரண்டாம் பாகம்  ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், 21 அமைச்சர்களின் சொத்துப்படியல் அதில் வெளியிடப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com