இன்றும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  கோயமுத்தூர், நீலகிரி 
தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு இடி மின்னலுடன் சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்தது. சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.