"சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா"? என எழுந்த கேள்வி.. சுதாரித்த ஓபிஎஸ்!! என்ன சொன்னார்?

சசிகலா-வை கட்சியில் சேர்ப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய பதில்?
"சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா"? என எழுந்த கேள்வி.. சுதாரித்த ஓபிஎஸ்!! என்ன சொன்னார்?
சென்னை திருப்புவதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டுமென்றாலும் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும்.. அதன் பிறகு தான் அதனை செயல் படுத்த முடியும்.. என கூறினார். மேலும் மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உடனே அவர், ஐயோ சாமி.? வாங்க சாமி.? (சிரிக்கிறார்) என்று கூறிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார்.
இதே மதுரையில் கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ்ஸிடம்  சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வீர்களா என கேட்டதற்கு அவர் கூறியது, அதிமுக தலைமை தான் இது குறித்து முடிவு செய்யும் என்று கூறினார். இந்த பதிலுக்கே கட்சியில்  பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டார். அதேபோல், ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா சசிகலாவை சென்று சந்தித்தற்கு, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சசிகலா பற்றி பேசிலான ஏதாவது ஒரு பிரச்ச வெடிக்கிறது. இதனால், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு சரிவர பதிலளிக்காமல் சென்றுள்ளார் ஓபிஎஸ்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com