சர்கார் படத்தை போல வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி! போராடி வாக்களித்த சுவாரஷயம்  

காஞ்சிபுரம் அருகே கள்ள ஓட்டாக போடப்பட்ட தனது வாக்கை விட்டுக் கொடுக்காமல், ’சர்கார்’ பட பாணியில் போராடி சேலஞ்ச் ஓட்டு போட்ட பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவரின் மனைவி பார்வதி, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது கைக்குழந்தையுடன், சிங்காடிவாக்கம் வாக்கு மையத்திற்கு   சென்றார். ஆனால், ஏற்கனவே அவரது வாக்கு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி, அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்த நிலையில், அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள், விஜய்யின் ’சர்கார்’ பட பாணியில், பார்வதிக்கு 49பி படிவத்தை வழங்கி, சேலஞ்ச் ஓட்டினை பதிவு செய்ய வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com