மகளிர் உரிமை தொகை: " சில தளர்வுகளை ஏற்படுத்துக" - விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

மகளிர் உரிமை தொகை:   " சில தளர்வுகளை ஏற்படுத்துக" - விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்ட  கட்டுபாடுகளில்  சில தளர்வுகளை  ஏற்படுத்த வேண்டும் என விசிக தலைவா் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தனது தந்தை தொல்காப்பியன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தாய் பெரியம்மாவுடன் வந்த தொல்.திருமாவளவன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

"கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மண்டல வாரியாகவும் அமைக்க வேண்டும் என கோரினார். அதாவது மேற்கு மாவட்டம், டெல்டா மாவட்டம் திருச்சி போன்ற மைய மாவட்டங்களில் இத்தகைய நூலகங்கள் உலக தரம் வாய்ந்த நூலகங்களாக அமைவது படிக்கும் இளம் தலைமுறைகளுக்கு மேலும் தங்களை வலிமைப்படுத்துவதற்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என அவர் கூறினார்.

மகளிர் உரிமைத்தொகை தெருவில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு:-

” பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் அவர்கள் அந்த வரையறைகளை வகுத்திருக்கலாம் அந்த வரையறைகள் பரிசிலனைக்கு கூறியது என்று நான் கருதுகின்றேன். பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வருவ வேண்டுமெனவும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு முதல்வர் முன் வரவேண்டும்”,  என கூறினார்.

” மக்களின் கோரிக்கையில் இருந்து அரசு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். பொருளாதாரம் மட்டுமல்லாமல் பல அளவு கோளை வைத்திருக்கிறார்கள். அந்த அளவு கோலால் பெரும்பாலான பெண்களுக்கு அந்த உரிமைத் தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர்.

ஆகவே அவற்றில் சில தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என நான் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்”, எனக்  கூறினார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com