மகளிர் உரிமைத் திட்டத்தின் மேல்முறையீடு முகாம் அமைச்சர் ஆய்வு..!

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத்திட்டத்தின் மேல்முறையீடு முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடிவட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலைதொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவிமையத்தின் செயல்பாடுகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. மேலும், சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.   30 நாட்கள் இந்த முகாம் நடைபெறும். பலபெண்கள் வங்கி கணக்கு விபரங்கள் மாற்றி கொடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் உதவித்தொகை வழங்கப்படும். 
ஆய்வின்போது,  மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், வட்டாட்சியர் பிரபாகரன், சிவில் சப்ளை தாசில்தார் ஜான்சன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com