தொழிலாளர்கள் போரட்டத்தினால் முடிவை மாற்றிய ஃபோர்டு நிறுவனம்!

தொழிலாளர்கள் போரட்டத்தினால் முடிவை மாற்றிய ஃபோர்டு நிறுவனம்!

செங்கல்பட்டு ஃபோர்டு தொழிற்சாலையை மூடும் நடவடிக்கைகள் ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து 34 நாட்கள் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை  சரிவடையத் தொடங்கியதால் கடந்த 30-ம் தேதியோடு தொழிற்சாலையை மூட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலை வாய்ப்பை உறுதி செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையை மூடும் நடவடிக்கைகளை ஒரு மாதம் ஒத்தி வைப்பதாக ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 34 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தொழிலாளர்கள் திரும்பப் பெற்றனர். நாளை முதல் ஃபோர்டு தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.