சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது...ஏற்காடு  வெறிச்சோடி காணப்பட்டது!

சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது...ஏற்காடு  வெறிச்சோடி காணப்பட்டது!

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளமான ஏற்காட்டிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

முதன்மையான இடங்கள்

அவ்வாறு ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, ரோஜா தோட்டம் போன்ற இடங்களையும் அதனை தொடர்ந்து  லேடீஸ் சிட், சில்ட்ரண்ஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பகோடா பாயிண்ட் உள்ளிட்ட வியு பாய்ண்ட்களையும்  சுற்றி பார்த்து மகிழ்வார்கள்.

தேர்வுகள் காரணமா?

ஆனால் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் விடுமுறை நாளான நேற்றும் இன்றும் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் வரவு குறைந்து. இதனால்  இங்குள்ள பூங்காக்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. இவ்வாறு இருந்த போதிலும் ஏற்காடு  படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.