திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதற்கு பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு நலன் பயக்கும் பல முக்கியத் திட்டங்கள் இடம் பெறவில்லை என கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி - கோதாவரி நதிநீர் இணைக்கப்படும் என நீங்கள் சொன்னதை கடந்த ஆட்சியில் செய்யாமல் விட்டு விட்டீர்கள் என குற்றம்சாட்டினார்.
மேலும் மாநிலத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்க அதிமுக அரசு தவறிவிட்ட நிலையில் மாநிலங்களுக்கிடையே ஆறுகளை இணைக்க ஆலோசனை வழங்குவதா? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.