விடுமுறை இல்லை...என்னை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே வேலை...மின் ஊழியரை மிரட்டும் இளமின் பொறியாளர்!

விடுமுறை இல்லை...என்னை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே வேலை...மின் ஊழியரை மிரட்டும்  இளமின் பொறியாளர்!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இளமின் பொறியாளர் ஊழியரை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக தீபக்  என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பவானியில் இருந்து தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் அதே அலுவலகத்தில்  பணிபுரியும் ஹரி ராஜ் என்ற மின் ஊழியர், அவரது குடும்ப பிரச்னை காரணமாக தனக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்குமாறு இளமின் பொறியாளர் தீபக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் தீபக், விடுமுறை அளிக்க மறுத்ததுடன், தன்னை அட்ஜஸ்ட் செய்து வேலை செய்தால் மட்டுமே இங்கு வேலை பார்க்க முடியும், இல்லை என்றால் உன்னை தொலைத்து விடுவேன் என ஆக்ரோஷமாக மிரட்டியுள்ளார். தற்போது இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com