எனக்கு நீதிபதிய நல்ல தெரியும்? பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்!

  குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

எனக்கு நீதிபதிய நல்ல தெரியும்? பீட்டர்வுட்ட இளைஞருக்கு  அபராதம் விதித்த போலீஸ்!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ்  சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.