டிஜிபி சைலேந்திர பாபுவை பார்த்தே ஆகணும்... 150 அடி டவரில் பெட்ரோல் கேனுடன் ஏரிய இளைஞர்!! 

டிஜிபி சைலேந்திர பாபுவை பார்த்தே ஆகணும்... 150 அடி டவரில் பெட்ரோல் கேனுடன் ஏரிய இளைஞர்!! 
Published on
Updated on
1 min read

நாமக்கல்லில், 150 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றிருந்தார்.  சிறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென சிறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு சென்று கைதிகளை சந்தித்துள்ளார். 

குற்றவாளிகளாக சிறைக்குள் வருவோர் என்றுமே குற்றவாளிகள் அல்ல என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசிய சைலேந்திரபாபுவின் பேச்சுக்கள், சிறைவாசி சுரேஷை முற்றிலும் மாற்றியிருக்கிறது.  திருட்டு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து திருந்தி வாழ முடிவெடுத்தவர், தன் மாற்றத்துக்கு காரணமாக சைலேந்திரபாபுவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக வைத்துள்ளார். 

ஆனால் எவ்வளவோ முறை முயன்றும் பார்க்க முடியாததால் விரக்தியடைந்த சுரேஷ் எடுத்த முடிவுதான் இது.  நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் பெட்ரோல் கேனுடன் ஏறியுள்ளார் சுரேஷ். 

சுமார் 300 அடி உயரம் கொண்ட டவரில் பாதி வரை சென்றவர் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சுரேஷை பத்திரமாக அழைத்து சமாதானம் பேசினர். 

இதையடுத்து தான் சைலேந்திரபாபுவின் தீவிர ரசிகன் என்றும், ஒரு முறையேனும் அவரை பார்ப்பதே என் லட்சியம் என்றும் கூறியவர் மனுவையும் அளித்துள்ளார். இதை கண்ட மக்கள், சுரேஷின் ஆசை நிறைவேறுமா என எதிர்பார்த்திருக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com