திமுகவின் அங்கிகாரத்தை ரத்து செய்தாலே மொத்த கூடாரமும் காலி... மாரிதாஸ் தில்லானா ட்வீட்

திமுகவின் அங்கிகாரத்தை ரத்து செய்தாலே மொத்த கூடாரமும் காலி ஆகிவிடும் என மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுகவின் அங்கிகாரத்தை ரத்து செய்தாலே மொத்த கூடாரமும் காலி... மாரிதாஸ் தில்லானா ட்வீட்

சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து சர்ச்சை கருத்துக்களைப் போட்டு பிரபலமானவர் மாரிதாஸ். பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் ஃபேமஸ் ஆனவர் தான் இந்த மாரிதாஸ். அபத்தமாகவும் பேசுவதிலும், புள்ளிவிவரங்களை துல்லியமாக கூறுகிறேன் என்று சொல்லி, நெட்டிசன்களிடம் சிக்கி சீரழியும் தரமான சம்பவங்களும் நடக்கும்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்று தினமும் தம்கட்டி பேசி பேசியே டயர்ட்டாகி ஒரு கட்டத்தில், பாஜகவை புகழ்ந்து தள்ளினார். அப்படியே அதிமுகவுக்கும் முட்டுக்கொடுப்பார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வரை ஆக்டிவாக இருந்து வந்த மாரிதாஸ் சமூகவலைத்தள பக்கங்கள் பிளாக் ஆனது  இந்நிலையில் பலநாட்களுக்கு பின் மீண்டும் திமுகவை திட்ட களமிறங்கிவிட்டார். இப்போது திமுகவை தொடர்ந்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.சமீபத்தில் கைதான இவரது நண்பர் கிஷோர் கே சாமி குண்டர் சட்டம் பாய்ந்தாலும் தில்லாக திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலினைத் திராவிட நாடு பிரிவினை பேசச் சொல்லவும். திமுகவின் அரசியல் கட்சி அங்கிகாரத்தை ரத்து செய்தாலே போதும் மொத்த கூடாரமும் காலி. அரசியலைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்க ஒன்று கூடிய திமுக கும்பலுக்கு என்ன கொள்கை இருக்கும் திமுக திராவிட நாடு பிரிவினை முடிஞ்சா பேசு என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com