சென்னையில் 5 ஜி..! சிம் கார்ட் மாற்றம் தேவையா?

சென்னையில் 5 ஜி..! சிம் கார்ட் மாற்றம் தேவையா?

சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 ஜி ஏலம்:

இந்திய மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை  5ஜி அலைக்கற்றையை அண்மையில் ஏலம் விட்டது. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகளை  ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. 

5 ஜி அறிமுகம்:

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி சேவையை, டெல்லியில் கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை முதலில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: வரி உயர்வால் கஜானாவை நிரப்பிய சென்னை மாநகராட்சி...!

ஜியோ:

அதையடுத்து, தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. 

ஏர்டெல்:

சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் நேற்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிம் கார்ட் மாற்றம்?:

மேலும், 5ஜி மொபைல் வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும், சிம் கார்டை மாற்றாமல், 4ஜி கட்டணத்திலேயே 5 ஜி சேவையை பயன்படுத்தலாம் என்றும் இண்டர்நெட் வேகம் 30லிருந்து 40 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகரங்களிலும் ஏர்டெல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கும் வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.