பிழையை கண்டறிந்ததற்கு இவ்வளவு ரூபாய் பரிசா..?

பிழையை கண்டறிந்ததற்காக, ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவருக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம், குறிப்பிட்ட தொகையை பரிசாக வழங்கியுள்ளது.

பிழையை கண்டறிந்ததற்கு இவ்வளவு ரூபாய் பரிசா..?

சமூக ஊடக பயன்பாடானது இன்றளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி பல்லலாயிர கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் சமூக ஊடக பயன்பட்டு செயலியான இன்ஸ்டாகிராமில் உள்ள பிழையை ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவர் கண்டறிந்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நீரஜ் சர்மா என்ற மாணவர், இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்யாமல் காப்பாற்றியதாக பரிசு பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராம் செயலியில், லாகின் பாஸ்வேர்ட் என்று சொல்லக்கூடிய உள்நுழைவு கடவுச்சொல் இல்லாமல் எந்த ஒரு பயனரின் கணக்கிலும் சிறு உருவங்களை(Thumbnail) மாற்ற முடியும். இந்த தவறை தான் நீரஜ் சர்மா கண்டறிந்துள்ளார். 

பின்னர் இந்த தவறு குறித்து, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார். அது உண்மையானது என்று கண்டறிந்த பிறகு, அவருக்கு இந்த செயலுக்காக ரூ.38 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து கூறிய நீரஜ் சர்மா, " பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் ஒரு பிழை இருந்தது , அதன் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்- களின் (thumbnail) படத்தை எந்த கணக்கிலிருந்தும் மாற்றியிருக்கலாம். கடவுச்சொல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அதை மாற்ற கணக்கின் மீடியா ஐடி மட்டுமே தேவை." என கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், " பேஸ்புக்கிற்கு ஒரு அறிக்கையை அனுப்பினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. இது ஒரு டெமோவைப் பகிரும்படி என்னிடம் கேட்டது. 5 நிமிடங்களில் சிறுபடத்தை மாற்றிக் காட்டினேன்" என கூறியுள்ளார். 

மேலும் அந்த அறிக்கை அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கு ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வந்ததுள்ளது. அதில் அவருக்கு $45,000 (சுமார் ரூ. 35 லட்சம்) பாரிசாக வழங்கியுள்ளது. அதே நேரம், இந்த பரிசு வழங்குவதில் நான்கு மாதங்கள் தாமதமானதால் பேஸ்புக் $4500 (சுமார் ரூ. 3 லட்சம்) போனஸாகவும் வழங்கியுள்ளது.