தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி... இஸ்ரோ சாதனை!!

தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி... இஸ்ரோ சாதனை!!

மீண்டும் பயன்படுத்தக்கூடிய "தன்னியக்க ஏவுகணை சோதனையை" இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது. 

மீண்டும் மீண்டும்:

மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஏவுகணைகளை தயாரிப்பது விண்வெளி துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை உருவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலையில், இந்தியாவும் இந்த சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

முதலீடு:

1975 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ 120க்கும் மேற்பட்ட ஏவுகணை திட்டம் மூலம் செயற்கைக் கோள்கள் விண்கலங்கள் போன்றவற்றை விண்ணிற்கு அனுப்பி வருகிறது.  இந்திய ரஷ்ய கூட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, எஸ் எஸ் எல் வி ராக்கெட்கள் விண்ணில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டு விண்ணில் ஏவப்படுகின்றன.  இந்நிலையில் விண்ணில் அனுப்பும் ராக்கெட்டை வெற்றிகரமாக மீண்டும் தரையிரக்கி பயன்படுத்தும் வகையிலான மறு பயன்பாட்டு ஏவுகணை தொழில்நுட்ப திட்டத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதலீடு செய்தது.

முதல் வெற்றி:

அதன் படி மே 23, 2016 அன்று மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட சோதனையில் மறுபயன்பாட்டு ஏவுகணை  ஆனது 770-வினாடிகள் கொண்ட ஒரு துணை விமானம் உதவியோடு கடலில் தரையிறங்கியது.  சோதனைப் பணியானது, HS9 திட ராக்கெட் பூஸ்டர் மறு பயன்பாட்டு ஏவுகணையை ஏறக்குறைய 65 கிமீ உயரத்திற்கு ஏற்றிச் செல்வதில் வெற்றி கண்டது. 

சோதனை வெற்றி:

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி 4.5 கிமீ உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  கிடைமட்ட வேகத்தில் ஓடுபாதைக்கு முன்னால் சுமார் 4 கிமீ முதல் 5 கிமீ தொலைவில் ஹெலிகாப்டரில் இருந்து மறு பயன்பாட்டு வாகனம் விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பிறகு, மறுபயன்பாட்டு வாகனம் சறுக்கி, ஓடுபாதையை நோக்கிச் சென்று, தானியங்கியாக தரையிறங்கியது.   

பத்து வருட முயற்சி:

சோதனை வெற்றிகரமாக முடிந்ததும் மென்பொருள், தரையிறங்கும் கருவியை சரிபாரப்பு, விமானத்தை இயக்குவதற்கும், ஓடுபாதையில் உள்ள உத்தேசித்த இடத்திற்கு அதை மீண்டும் கொண்டு வருவதற்கும் ஏரோடைனமிக்ஸ் சென்சார்கள் எவ்வாறு வேலை செய்தன என்பதைப் பற்றிய தரவுகளை பெற்றுள்ளதாகவும் அவற்றை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  கடந்த பத்து வருடமாக மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினத்தின் சோதனை வெற்றி முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  திரைப்பட நடிகை ஸ்ரேயா திருப்பதியில் சுவாமி தரிசனம்....!!!