ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் கேம்க்கு தடை..? 

ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் அடிமையாவதால், அந்த செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதம் எழுதியுள்ளார்.

குழந்தைகளின் மனநிலையை மாற்றும், அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும், ஃப்ரீ ஃபயர் போன்ற மேலும் பல விளையாட்டு செயலிகள் தொடர்ந்து செயல்பட்டில் தான் உள்ளது.

அவற்றை விளையாடும் சிறுவர்கள் அதற்கு அடிமையாகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த மாவட்ட கூடுதல் நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதம் எழுதி உள்ளார் .