சந்திரயான் -3 தொட்ட 'சிவசக்தி முனை'!

சந்திரயான் -3 தொட்ட 'சிவசக்தி முனை'!
Published on
Updated on
1 min read

சந்திரயான்-3ன் லேண்டர் நிலவை தொட்ட இடத்திற்கு சிவசக்தி முனை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐஎஸ்ஆர்ஓ  நிலவினை ஆராய்ச்சி செய்வதற்காக இதுவரை மூன்று விண்கலங்களை நிலவிற்கு செலுத்தி இருக்கிறது. இவற்றில் சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 ஆகியவை வெற்றிகரமாக தனது பயணத்தை நிறைவு செய்து நிலவினை அடைந்துள்ளன. சந்திரயான் 2 மட்டும் தரை இறங்குவதில் ஏற்பட்ட கோளாறில் நிலவை தொடுவதற்கு முன்பே வெடித்து சிதறியது. இதனை அடுத்து சந்திரயான் 3 உள்ள லேண்டரை மென் இறக்க வழிமுறைகளின் மூலம் தரை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதனை கடந்த 23 ஆம் தேதி தரை இறக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். 

அப்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் இருந்த பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரவித்திருந்தார்.  இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உரையாற்றிய பிரதமர் சந்திரயான் 3 தரை இறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஐ தேசிய விண்வெளி நாளாக கொண்டாடுவோம் என தெரிவித்தார். மேலும் சந்திரயான் 3 தரை இறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி முனை'  என்று பெயர் சூட்டினார்.

முன்னதாக 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் காலகட்டத்தில் சந்திரயான் 1 விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட லேண்டர் நவம்பர் 14 2008 அன்று நிலவில் இறங்கியது. அன்றைய தினம் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் என்பதால் ஜவகர் முனை என அந்த இடத்திற்கு பெயர் சூட்டப் பட்டது. ஆனால் தற்போது நிலவில் தரை இறங்கிய சந்தியான் 3 தரை இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி முனை என்று ஏன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com