இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தொடரும் சிக்கல்கள்..!!

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குநர், 7 நாளில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, உத்தரப்பிரதேச போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தொடரும் சிக்கல்கள்..!!

நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளை முறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய டிஜிட்டல் கொள்கையை வகுத்துள்ளது.

இதற்கு இந்தியாவில் செயல்படும் அனைத்து சமூக வலை தள நிறுவனங்களும் இணங்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் டுவிட்டரை தவிற மற்ற அனைத்து நிறுவனங்களும் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு இணங்க ஒப்புக் கொண்டன.

இதையடுத்து இந்தியாவில் டுவிட்டர் நிறுவனம் சட்ட ரீதியான பாதுகாப்பை இழப்பதாக மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

அதாவது இனி டுவிட்டர் தளத்தில் நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பகிர்ந்தால் இதற்கு டுவிட்டர் நிறுவனமே பொறுப்பாக கருதப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் தொழுகையில் ஈடுபடுவதற்காக மசூதிக்கு சென்றுக் கொண்டிருந்த முதியவரை சிலர் மதத்தின் பெயரால் தாக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையிலும் வீடியோ பகிரப்பட்டுள்ளதாக கூறி ‘டுவிட்டர்’ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக டுவிட்டரின் இந்திய நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரிக்கு, உத்திர பிரதேச கவால்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அடுத்த 7 நாட்களுக்குள்நேரில் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.