பெண்களின் புகைப்படங்கள் இழிவாக சித்தரித்த செயலி...உருவாக்கிய நபர் அதிரடியாக கைது

இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்திய ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய நபர், காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் புகைப்படங்கள் இழிவாக சித்தரித்த செயலி...உருவாக்கிய நபர் அதிரடியாக கைது

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியில், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். அதில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஓம்காரேஷ்வர் தாக்குர் என்பவர் இந்த செயலியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்ததில், கடந்த 2020ம் ஆண்டு ட்விட்டர் பக்கத்தில் ஒரு குழு இணைந்ததாகவும், அதில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் யோசனை பகிரப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.