இனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில் நியூ அப்டேட் இதோ

வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் வீடியோவின் தரத்தை பயனாளர்களே உயர்த்திக்கொள்ளலாம் என அந்நிறுவனம் புதிதாக ஒரு அப்டேட் வழங்கியுள்ளது.

இனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில் நியூ அப்டேட் இதோ

வருங்காலங்களில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டாக, இந்த வசதியை பயனாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் ஆட்டோமேட்டிக், பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

ஆட்டோமேட்டிக் விருப்பத்தினை தேர்வு செய்வதன் மூலம் வீடியோவை அப்படியேவும், பெஸ்ட் குவாலிட்டி ஆப்ஷன் மூலம் வீடியோவை உயர் தரத்தில் அனுப்பலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேட்டா சேவ் முறை மூலம் வீடியோக்களின் அளவைக் குறைத்து அனுப்பலாம் . வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசும்போதும் வீடியோவின் தரத்தை நிர்ணயம் செய்யும் தொழில்நுட்பத்தையும் வாட்ஸ் அப் விரைவில் வழங்க உள்ளது.

அதே போல் வியூ ஒன்ஸ் என்ற வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அதாவது, உங்களின் நண்பருக்கோ உறவினருக்கோ ஒரு ஃபோட்டோவை அனுப்பி அதை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம்.

அதற்கு படத்தை அனுப்புவதற்கு முன்னதாக சாட் இன்புட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 1 என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அனுப்பலாம். இந்த வசதியும் இப்போது சோதனை முயற்சியில் உள்ளது.