
சென்னையில் கட்டுமானத்துறையில் ஸ்மார்ட் தொழில் நுட்பத்தை புகுத்தும் விதமாக தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் வீடுகளை உருவாக்கி வருகிறது.
'அதித்தி ஹோம்ஸ்' என்ற அந்த நிறுவனம் எம்ஜிஆர் பல்கலை கழகத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட் வீடுகளை உருவாக் வருகிறது.
டிஜிட்டல் தொழில் நுட்பகாலத்தில் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் டிஜிட்டல் முறையில் ஆளும் வகையில் இந்த தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தின்படி வீட்டு வரவேற்பு அறை முதல் சமையல் அறை வரை அனைத்தும் உள்ளங்கையில் உள்ள மொபைல் போன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
உதாரணமாக வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்கும் லாக்கர் வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரும் திறக்க முடியாத படி வடிவமைப்பு, அதற்கென பிரத்யேக செயலி மூலம் தங்களின் மொபைல் மூலம் இயக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிச்சனில் அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் காலியானால் அந்த டப்பாவில் பொருத்தப்பட்டுள்ள மென் பொருள் நேரடியாக சூப்பர் மார்கெட்டுக்கு தகவல் அனுப்பி விடும். அவர்கள் உடனடியாக அந்த பொருட்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும் வகையிலான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.