ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இந்திய வம்சாவளி தேர்வு..!

சி.இ.ஓ பதவி தனக்கு கிடைத்த கவுரவம் - பராக் அகர்வால்

ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இந்திய வம்சாவளி தேர்வு..!

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தலைமை பதவி தமக்கு கிடைத்த கவுரவம் என்றும், டோர்சியின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் அவரது நட்புக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஐ. ஐ.டி. பாம்பே மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த பராக், 10 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.