ஆய்வை தொடங்கியது ,. ஆதித்யா L1 விண்கலம் ..!

ஆய்வை தொடங்கியது ,. ஆதித்யா L1 விண்கலம் ..!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம், அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து நிலைநிறுத்தப்படும் ஆதித்யா, நாளை புவி வட்டப்பாதையில் இருந்து வெளியே செல்கிறது.

இந்நிலையில் ஸ்டெப்ஸ் என்ற கருவியில் பொருத்தப்பட்டுள்ள 6 சென்சார்களின் மூலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துகல்களை ஆய்வு செய்ய இத்தரவுகள் உதவும் என கூறப்பட்டுள்ளது.

அதிவெப்ப, ஆற்றல்மிகு அனுக்கள் - எலக்ட்ரான்களை அளவீடு செய்து தரவுகள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அலகுகளில் ஒன்றால் சேகரிக்கப்பட்ட ஆற்றல் துகள் சூழலில் உள்ள மாறுபாடுகளை படம் காட்டுகிறது.  என இஸ்ரோ நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க   | "சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளது" பிரதமர் மோடி!!