புதிய டிஜிட்டல் கொள்கை... ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்

தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18-ம் தேதி ஆஜராக டுவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

புதிய டிஜிட்டல் கொள்கை... ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.  

இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்  என்பவை போன்ற பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ம

த்திய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க மே 25-ந் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன.

ஆனால் டுவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18-ம் தேதி ஆஜராக டுவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்க ளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. 18-ம் தேதி டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக வேண்டும். மத்திய அரசு தரப்பில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளும் நிலைக்குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.