வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில் எதிர்ப்பு

வாட்ஸ் ஆப்-பின் தனியுரிமைக் கொள்கைக்கு ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில் எதிர்ப்பு

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் கடந்த ஜனவரி மாதம் தனது தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்து அறிவித்தது.

அதன்படி பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய விதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வகுத்துள்ளது.

இதனால் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படும் ஆபத்து உள்ளதாக இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய கொள்கை உலகளவில் புதிய சர்ச்சையை கிளப்பியது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் வாட்ஸ் ஆப்-பின் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பில் அதன் 8 உறுப்பினர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அதன் புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனர்களுக்கு நியாயமற்ற முறையில் அழுத்தம் கொடுப்பதாகவும், இந்த நியாயமற்ற வணிக நடைமுறை ஐரோப்பிய ஒன்றிய விதி மீறல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.