" மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துக் செல்லும் விண்கலம் தயாராக இருக்கிறது” - Space X நிறுவனம்

" மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துக் செல்லும் விண்கலம் தயாராக இருக்கிறது” - Space X நிறுவனம்

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துக் செல்லும் விண்கலம் தயாராக இருப்பாதாக எலான் மஸ்க் இன் space X நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் தனியார் விண்வெளி தளமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரபல கோடீஸ்வரரும், எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது. மனிதர்களை செவ்வாய் கோளுக்கு அனுப்பும் தனது திட்டத்தை எலான் மஸ்க் கடந்த 2020 ஆண்டே வெளிப்படுத்தியிந்தார். மேலும் 2050 ஆம் ஆண்டிற்குள்ளாக 1 மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.. அதனை தொடர்ந்து அதற்க்கான முயற்ச்சிகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில்  தரையிறங்குவதற்கான வழங்குமாறு நாசாவிடம் கேட்டுள்ளனர்.  

மனிதர்களையும் , பொருட்களையும் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்து செல்வதற்காக ஒரு Space Ship அ யும் தயார் செய்யும் முயற்ச்சியிலும் Space X நிறுவனம் ஈடுபட்டு வந்தனர். 

Image

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்கலம் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்த பின்னர் ப்ளோரிடோ மாகாணத்தில் உள்ள  space X நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்திவத்திருப்பதாக,  தனது சமூக வலைதளங்களில்  space X நிறுவனம் பதிவிட்டுள்ளது.   இந்த விண்கலம் தான் மனிதர்களை நிலவிற்க்கும் செவ்வாய் கிரகத்திற்கும் அழைத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலம் என்றும் 25 முதல் 30 மாடி உயரம் அதாவது சுமார் 120 மீட்டர் உயரம் கொண்ட இந்த விண்கலம் 120 டன் எடையுடன் விண்வெளியை நோக்கி பயணிக்கும் திறன் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் என கருதப்படும் டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு பின்னர் தானாக பயணிக்கவும் தரையிறங்கும் திறனை கொண்டது இந்த ஸ்டார்சிப் விண்கலம் . 

இந்த நிலையில் தற்போது மனிதர்களை ஏற்றிச் செல்வதற்காக அமெரிக்க விண்வெளித்துறையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் Space X நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  | கிளிமஞ்சாரோ மலை ஏறுவதற்கு, தான்சானியா பறந்த முத்தமிழ் செல்வி!!