ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயரத்தியது வோடஃபோன் ஐடியா நிறுவனம்.!!

ஏர்டெலை தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயரத்தியது வோடஃபோன் ஐடியா நிறுவனம்.!!
Published on
Updated on
1 min read

ஏர்டெலை தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது  ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது வாடிக்கையாளர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ஏர்டெலை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த உள்ளது. இந்த கட்டண உயர்வானது வருகிற 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி பேசிக் ப்ளானுக்கான கட்டணம் 79 ரூபாயிலிருந்து  99 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உச்சபட்ச டாப் அப் கட்டணத்திலும் 500 ரூபாய் உயர்த்தப்பட்டு,  2 ஆயிரத்து 899 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம், தொழில்துறையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும் என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. 
 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com