இந்தியாவில் "ஆப்பிள் பே"... எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும்?

இந்தியாவில் "ஆப்பிள் பே"... எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும்?

இந்தியாவில் ஆப்பிள் தொழிநுட்பத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்திவரும் நிலையில், பணிபுரிவர்த்தனைக்காக மூன்றாம் தரப்பு செயலிகளை உபயோகிப்பதால், தனது சொந்த பணப்பரிவர்த்தனை செயலியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தனது இந்திய பயனர்களுக்காக "ஆப்பிள் பே" ஆன்லைன் பரிவர்த்தனை அம்சத்தை அறிமுகப்படுத்த, நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது, ஆப்பிள் நிறுவனம், National payment corporation of India (NCPI) தேசிய கொடுப்பனவு கழகத்திடம், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், போன் பே, கூகுள் பே, வாட்சப் பே மற்றும் பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகளுடன், போட்டியிட்டு ஆப்பிள் பே-யும் களத்தில் இறங்கும். 

வாடிக்கையாளர்கள் வழக்கம் போல், கியு ஆர் கோடை, ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்வது போன்று, மற்ற பணப்பரிவர்த்தனை செயலிகளின் உதவி இல்லாமல், இதில் பணபரிவர்தனைகளில் ஈடுபடுமாறு செயல்படுத்தப்படும், என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் கூக், இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ஆப்பிள் தொழிலநுட்ப உபகரணங்களின்  பாதுகாப்பின் உச்சமாகக் கருதப்படும், பேஸ் ஐடி யை, ஆப்பிள் பே யில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுதும், அதே அம்சத்தை பயன்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடைய ஆப்பிள் பே, தற்போது முதற்கட்ட நகர்வில் உள்ள நிலையில், விரைவில் தனது சேவையை, இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க || கேரளாவில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம்... ஈரோட்டில் ஐ எஸ் பயங்கரவாதி கைது!!