மத்திய அரசின் புதிய மின்சார பயன்பாட்டுக் கொள்கையால் விவசாய சகோதரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிலம்பு செல்வர் மா பொ சிவஞானம் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி நகரில் உள்ள அவரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப் படத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மரியாதைக்குரிய மாபோசி ஐயா அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் ஏனென்றால் திருத்தணி போன்ற நகரங்களில் எல்லாம். கடுமையான எல்லை போராட்டம் நடத்தி தமிழகத்தில் எவ்வளவு மகிமையை பெற்றுத் தர முடியுமோ அதை பெற்று தந்திருக்கிறார். என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் ஐயா மாபோசி அவர்கள் இதனால் அவர் மீது அதிக ஈடுபாடு உண்டு", எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் புதிய மின்சார பயன்பாட்டுக் கொள்கையால் விவசாய சகோதரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது மாற்று மின் சக்தியை பயன்படுத்த முயற்சி எடுக்கும் செயல்பாடு. இதனால் மின்சார கட்டணம் பகல் நேரங்களில் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், புதிய மின்சார கொள்கை முதலில் தொழிற்சாலைகளில் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது எனவும் பகிர்ந்து அளித்து சரியாக பயன்படுத்தி அதன் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.