உலகின் முன்னணி தேடுப்பொறி தளமான கூகுள் நிறுவனம் தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது.
உலகில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை தனக்கு தேவையான விபரங்களை முதலில் சென்று தேடும் இடம் கூகுள். உலகின் முன்னணி தேடுப்பொறி தளமாக இருக்கும் கூகுள் நிறுவனம் 1988-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதியன்று துவங்கப்பட்டது.
இந்நிறுவனத்தை செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இருவரும் இணைந்து துவங்கினர். இவ்வளவு எளிமையாக தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுப்பொறி கருவியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது.
அந்த வகையில்,கூகுள் இன்று தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. இதற்கென கூகுள் பிரத்யேக டூடுல் ஒன்றை வடிவமைத்து,அதில் அலங்கரிக்கப்பட்ட கூகுள் வார்த்தைகள், மெழுகுவர்த்தி, கேக் மற்றும் டோநட் கொண்டு டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 23 என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.
பிறந்தநாளையொட்டி கூகுள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,’ஒவ்வொரு நாளும் கூகுள் தளத்தில் பல கோடி தேடல்கள் நடக்கின்றன. உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது.
’உலக விவரங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கூகுளின் நோக்கம் இன்றுவரை மாற்றப்படவே இல்லை,' என தெரிவித்துள்ளது.