பல பயனர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம்...கடும் அதிருப்தியில் பயனாளர்கள்!

பல பயனர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம்...கடும் அதிருப்தியில் பயனாளர்கள்!

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல பயனர்களின் டுவிட்டர் கணக்குகள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட எலான் மஸ்க்:

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

50 சதவீத ஊழியர்களை நீக்கம்:

அதன் ஒரு பகுதியாக இன்று 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் கணக்குகள் முடக்கம்:

இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள சில பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் முடங்கியுள்ளன. பலரின் ட்விட்டர் பக்கம் செயலிழந்துள்ளதால், பயனாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com