"சுத்தமான தண்ணீரை குடிப்பது இனி ராக்கெட் அறிவியல் அல்ல", விஞ்ஞானி நம்பி நாராயணன்!

"சுத்தமான தண்ணீரை குடிப்பது இனி ராக்கெட் அறிவியல் அல்ல", விஞ்ஞானி நம்பி நாராயணன்!

உலகிலேயே பாட்டில் நீரை அதிகம் நம்பியிருக்கும் இந்தியாவில், பாட்டில் தண்ணீருக்கு மாற்றாக புக்வாட்டர் திகழும், என்கிறார் விஞ்ஞானி நம்பி நாராயணன். 

சென்னை மயிலாப்பூர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற விஞ்ஞானி நம்பி நாராயண் “புக்வாட்டருடன், சுத்தமான தண்ணீரை குடிப்பது இனி ராக்கெட் அறிவியல் அல்ல என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், புக்வாட்டர் இணைக்கப்பட்ட கேன் தொழில்நுட்பம் குடிநீர் தொடர்பான அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் எனவும், நிலத்தடி நீரின் மோசமான நிலை மற்றும் சுத்தமான தண்ணீருக்கான தேவை ஆகிய காரணங்களால் இந்தியா தான் பெருகிய முறையில் பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கிறது. சமீபத்திய தேசிய புள்ளியியல் அலுவலக அறிக்கையின்படி, 12.2% நகர்ப்புற இந்திய குடும்பங்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக பாட்டில் தண்ணீரை நம்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாகவும் இது 2009 இல் 2.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தண்ணீர் கேன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, அழுத்தம் மற்றும் UV கதிர் பாதிப்பு காரணமாக CAN-களுக்குள் மைக்ரோகிராக்குகள் உருவாகின்றன. பாசிகள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகள் இந்த விரிசல்களில் உட்பொதிந்து, கிருமிநாசினிகளால் கூட முழுமையாக வெளியேற்ற முடியாத அளவிற்கு பெருக்கம் அடைகின்றன. சில CANகள் பச்சை நிறத்தை பெறுவதற்கும், நுகர்வோரின் ஆரோக்கியத்தை கொடுப்பதாகவும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸை உட்கொள்வது புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் முதல் நரம்பியல் நோய்கள் வரை பல நாள்பட்ட மற்றும் நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், இதற்கு மாற்றாக புக்வாட்டர் உலகில் இயங்கும் தர அடிப்படையிலான நீர் விநியோக தளமாக அமைந்துள்ளது என குறிபபிட்டார். வீட்டு வாசலில் வழங்கப்படும் உயர்தர மற்றும் பாதுகாப்பான 20லி குடிநீர் கேன்களைப் பெறுவதற்கு, புக்வாட்டர் மிகவும் வசதியான வழியை வழங்குவதாகவும், ரியல் டைம் ஐஓடி சென்சார்கள் பாட்டில் ஆலைகளில் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தண்ணீர் கேனில் உள்ள QRஐ ஸ்கேன் செய்து, உற்பத்தி செய்யும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் "உங்கள் கேனில் அடைக்கப்பட்ட தண்ணீரின் தரத்தை" கண்டறியும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புக்வாட்டரின் கேன்கள் எப்பொழுதும் உண்மையானவை என சான்றுகள் பெறப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

மேலும், உலகில் முதன்முறையாக, புக்வாட்டரின் "இணைக்கப்பட்ட கேன்கள்"  எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது" மற்றும் QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அது எப்போது புதுப்பிக்கப்படுகிறது என்பதை அறிய முடியும் "இணைக்கப்பட்ட கேனில்" புக்வாட்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி QR ஐ ஸ்கேன் செய்வதன் மூலம், பேக்கேஜ் செய்யப்பட்ட தேதி, TDS அளவுகள், NABL சான்றளிக்கப்பட்ட ஆய்வக நீர் அறிக்கை மற்றும் தண்ணீர் கேனின் காலாவதி தேதி ஆகியவற்றைக் கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கிறது மற்றும் "கூகுள் பிளே ஸ்டோரில்" உள்ள புக்வாட்டர் செயலி மூலம் முன்பதிவு செய்து டெலிவரி பெற்று கொள்ளலாம். இந்தச் சேவையானது www.bookwater.com என்ற இணையதளத்தில் இணையப் பயன்பாடாகவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனவும் குறிப்பிட்டுள்ளார்.