ககன்யான் திட்டத்தில் தேக்கமா?

ககன்யான் திட்டத்தில் தேக்கமா?

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக இருக்கும் என்று  இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கூறியுள்ளார். 

ககன்யான் திட்டம்:

ககன்யான்திட்டம் என்பது குறைந்த சுற்றுப்பாதையில் மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதாகும்.


இத்திட்டத்தில் ஆளில்லா விமான பயணம் இரண்டும் மனிதர்களுடன் கூடிய பயணம் ஒன்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்குள் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மூன்று நபர்களைக் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது.

2018ல் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி முதலில் மனித விண்வெளி பயண திட்டத்தை முதலில் அறிவித்தார்.

ககன்யான் திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் 9000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தில் மாற்றம்:

இந்தியாவின் மனிதர்களை ஏற்றிச் செல்லும் திட்டமான ககன்யான்  விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு நிறைவேற்ற இயலாது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.  

இஸ்ரோ தலைவர் விளக்கம்:

இது மிக முக்கியமான பணி என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரோ தலைவர், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்போது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் பாதுகாப்பு குறித்து மிக கவனமாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

விண்கலத்தில் பழுது ஏற்படும் போது பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அமைப்பை மேம்ப்டுத்தி வருவதால் ககன்யான் திட்ட காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டம் எப்போது?

2024ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தபடும் என்று உறுதியாக கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர்.

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் விண்வெளியை நிரந்தர வாழ்விடமாக மாற்ற முடியும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.