தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் வெயில் சதம்

இந்த ஆண்டில் முதல்முறையாக சென்னையில் வெயில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தொட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வரக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை இருந்து வரக்கூடிய நிலையில் இன்று தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

மேலும் படிக்க| இந்து..! கிறிஸ்து ....! முஸ்லீம்... ! இணைத்து கொண்டாடிய இஃப்தார் விருந்து

குறிப்பாக முதன் முறையாக சென்னையில் இன்று மீனம்பாக்கம் பகுதியில் வெயில் 100 டிகிரி ஃபாரன் ஹிட்டை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம் 101.48°F, கோயம்புத்தூர் 101.66°F, தர்மபுரி 102.20°F, ஈரோடு 105.44°F, கரூர் பரமத்தி 104.90°F, மதுரை விமான நிலையம் 102.56°F, சேலம் 103.64°F, திருச்சிராப்பள்ளி 102.74°F, திருப்பத்தூர் 103.28°F,  திருத்தணி 102.20°F, வேலூர் 104.18°f வெயில் பதிவாகியுள்ளது.