இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிறந்த குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி!!..

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பாகிஸ்தானிய பெற்றோர் பெயர் வைத்துள்ள சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிறந்த குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி!!..

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம்ராம். இவர் மனைவி நிம்பு பாய். பலம்ராம் - நிம்புபாய் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்குச் சென்று வழிபடுவதற்காகவும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். 

பல்வேறு ஊர்களுக்கும் புனித தலங்களுக்கு சென்றுவிட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்து திரும்பினர். ஆனால், இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் மீண்டும் இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய முடியாமல் வேறு வழியில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துள்ளனர்.  

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பலம்ராமின் மனைவி நிம்புபாயிக்கு கடந்த 2 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அட்டாரி எல்லைப் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிம்புபாயிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை பார்டரில் பிறந்ததால் பார்டர் என்றே குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளனர்.