வளர்ப்பு நாய்களுக்கு முறைப்படி திருமணம் செய்த உரிமையாளர்கள்...!

வளர்ப்பு நாய்களுக்கு முறைப்படி திருமணம் செய்த உரிமையாளர்கள்...!
Published on
Updated on
1 min read

ஹரியானா மாநிலத்தில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வளர்ப்பு பிராணிகளுக்கு திருமணம்:

ஹரியானாவில் குருகிராம் பகுதியில் வசித்து வரும் அண்டை வீட்டார் தங்களது நாய்களான ஷூரு மற்றும் ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி 100 பத்திரிக்கைகள் அச்சடித்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்கப்பட்டு, முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் வளர்ப்பு பிராணிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. 

என் தனிமையை போக்கியவள்:

இது குறித்து ஸ்வீட்டியின் வளர்த்தவர்கள் பேசும் போது, எனக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லை, அந்த தனிமையை போக்குவதற்காக என் கணவர் கோவிலில் இருந்து அழைத்து வந்தது தான் ஸ்வீட்டி . அதற்கு தற்போது திருமணம் நடந்தது மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து,  வளர்ப்பு நாய்களுக்கு திருமணம் நடத்திய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com