ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறையை டெலிவரி செய்த பிரபல நிறுவனம்!!

ஆன்லைனில் வாச் ஆர்டர் செய்த வாலிபருக்கு பார்சலில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறைகள் வந்ததால் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறையை டெலிவரி செய்த பிரபல நிறுவனம்!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அணில்குமார். இவர் ஆன்லைனில் ஒரு கைக்கடிகாரத்தை பார்த்து ஆசைப்பட்டு உடனே அதை வாங்குவதற்காக ஆர்டர் செய்துள்ளார். அத்துடன் ஆன்லைன் மூலம் அந்த கடிகாரத்துக்கான பணம் ரூபாய் 2 ஆயிரத்து 400-ஐயும் செலுத்தியுள்ளார்.

அதில் அவருக்கு 15-ந் தேதி அந்த கடிகாரம் வந்து சேரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து அணில்குமாருக்கு சம்பவத்தன்று  ஒரு பார்சல் வந்ததுள்ளது. உடனே அவர் தான் ஆர்டர் செய்த கைக்கடிகாரம்தான் வந்து உள்ளது என்று நினைத்து அதை வாங்கி ஆவலுடன் பிரித்து பார்த்துள்ளார்.

அப்போது பார்சலில் வந்த சிறிய அட்டைபெட்டிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்த நபரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு சேர்க்கும் வேலை மட்டும் தான். ஆனால் அதில் ஆணுறை வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இவரின் பதிலால் ஆத்திரமடைந்த அணில்குமார், உடனே  தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அணில்குமார், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர   விசாரணை மேற்கொண்டுள்ளனர்.