காவல் உதவியாளரை பாராட்டிய நடிகர் “தாடி பாலாஜி”

காவல் உதவியாளரை பாராட்டிய நடிகர் “தாடி பாலாஜி”

திருவள்ளூரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அட்டவணைப்பிரிவு மக்களிடம் மன்றாடி அவர்களது குழந்தைகளைப்  பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தியிருக்கிறார். இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவருக்கு நடிகர் தாடி பாலாஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெண்ணாலூர் பேட்டை  அருகே உள்ள திடீர்நகர் பகுதியில் வசிக்கும் அட்டவணைப்பிரிவு மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உதவி ஆய்வாளர் பரமசிவம் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சரும் அவரது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க | தமிழகம் மதுவால் சீரழிந்து போனதற்கு தி.மு.க அரசு தான் காரணம்- ஹெச்.ராஜா

இந்நிலையில் அவரை பாராட்டி நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.  

இதையும் படிக்க | ஏப்ரல் 19 முதல் வாகன நிறுத்தத்திற்கு..... பயண அட்டை அவசியம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு...!